Friday, March 21, 2008

கவிதை




ஓவியன்
உலகிலேயே
எனக்கு
பிடித்த ஓவியன்
உன் அப்பாதான்
ஏன் என்றால்
உன்னை வரைந்ததால்

Thursday, March 20, 2008

நட்பு அலைகள்













































நட்பு
துயரம்
என்ற மழையில்
நனைந்தபோது
தோழமையின்
நட்பு குடை


........ச.சங்கரி

குழி
யானையை
பிடிக்க
காட்டில் குழி
பெண்ணே....
யாரை பிடிக்க
உன்
கன்னத்தில் குழி

அலைகள்
எத்தனை முத்தம்
கொடுத்தாலும்
ஆசை அடங்கவில்லை
கரையைத் தொடும்
அலைகள்.....!!!!

......ம்.சுரேஸ்

Wednesday, March 19, 2008

கனவு,பூ

















கனவு
கண்கள் நாடகமேடையில்
நானும் அவளும்
கதா பாத்திரம்
நாடகத்தின் பெயர்
கனவு




பூ
காலையில் பூக்கும்
செம்பருத்தி முதல்
மாலையில் பூக்கும்
அந்திமல்லி வரை
கொடுத்தேன்
பெற்றுக்கொண்டாய்
எந்நேரமும் பூக்கும்
என் இதயத்தை மட்டும்
ஏன் வெறுக்கிறாய்


Friday, March 14, 2008

வாழ்க்கை









வாழ்க்கை

குவியல்களாய் எதிர்பார்ப்புகள்...

கற்பனைகளாய் கனவுகள்...

இயந்திரமாய் நாட்பொழுதுகள்...

சிந்திப்புகளாய் நல்லெண்ணங்கள்...

கவிதைகளாய் குமுறல்கள்...

சோகங்களாய் பிரிவுகள்...

மகிழ்ச்சிகளாய் ஊதியங்கள்...

அரட்டைகளாய் நண்பர்கள்...

இப்படி

முடிவுகள் அற்ற தொடுவானமாய்

சுழன்று கொண்டிருக்கிறது

(அயல்தேசத்து)வாழ்க்கை











Wednesday, March 12, 2008

மழை

மழை
உன் மேல் உள்ள
ஆசையில்தானோ என்னவோ
நீ.....
உலா போக வெளியேவரும்பொழுது
தான் கருகருக்கிறது வானம்
மழையாய் உன்னை. ...
முத்தமிட...

மழைத்துளிகள்
மேலேபடாதவாறு குடை கொண்டு
தடுத்தாய் நீ...
ஆசையோடு வந்த மழைத்துளிகள்
கீழே விழுந்து கண்ணீராகி விட்டன..

தன் பலத்தைக் காட்டி
உன்னை மயக்கநினைத்தது மின்னல்..
உன் சிரிப்பைக்கண்டு
அதற்கும்வந்தது இன்னல்..

உன் பாதம் பட்டு உரசிச் சென்றதால்
மழைத்துளிகள் மோட்சம் அடைந்து
நதியில் கலந்தன..

மழையைக் கூட மகிமைப்படுத்தி
எழுதச் சொல்வது காதல்.............
எழுதும் போது வான்மேகம் போல
வார்த்தைகளுக்குள் மோதல்.....
வானத்தில் மட்டுமல்ல என் மனதிலும்
.........................மழை.....................................

Saturday, March 8, 2008

குழந்தைகள்

புரிந்த வார்த்தைகள் கொடுக்கும் மகிழ்ச்சியை விட 
புரியாத குழந்தையின் மழலை மகிழ்ச்சி அலாதியானது .